மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உயிருக்கு எமனான செல்போன்.. நடுராத்தியில் பேட்டரி வெடித்ததில் உடல்கருகி ஒருவர் பலி..! மனைவியின் கண்முன்னே துடிக்க துடிக்க நடந்த பயங்கரம்..!!
சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் பேட்டரி வெடித்ததில், வீடு தீப்பற்றி எரிந்து ஒருவர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் கூழைமூப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன். பி.ஏ பட்டதாரியான இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்றிரவு இவரது வீட்டில் மனைவி கஸ்தூரி மற்றும் மூத்தம்மண் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இவர் அருகாமையில் உள்ள ஓலைகுடிசையில் தூங்குவதற்காக சென்றுள்ளார்.
ஆனால் தூங்குவதற்கு முன்னதாக செல்போனில் சுத்தமாக சார்ஜ் இல்லாத காரணத்தால் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளார். இவர் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென செல்போனின் பேட்டரி வெடித்து தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.
மேலும் இவர் இருந்தது ஓலைகுடிசை என்பதால் குடிசை முழுவதும் எரியவே உடனடியாக அங்கிருந்து தப்பிக்க அர்ஜுன் முயற்சித்தார். அதுவும் முடியாத காரணத்தினால் சத்தம் போட்டு கத்தியுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அருகாமையில் இருந்தவர்கள் மற்றும் மனைவி ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர்.
இருப்பினும் குடிசை கொழுந்துவிட்டு எரிந்ததால் காப்பாற்ற இயலாமல் உடல்கருகி உள்ளேயே அர்ஜுன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அர்ஜுனின் உடலை மீட்டனர்.
பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது விசாரணையில், அக்கம் பக்கத்தினர் அர்ஜுன் செல்போன் வெடித்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.