தமிழகத்தையே உலுக்கிய விவகாரம்.. 16 வயது மகளின் வாழ்க்கையை நாசமாக்கிய தாய்.. வளர்ப்புத்தந்தை, புரோக்கர் உட்பட 4 பேர் மீது குண்டர் பாய்ச்சல்..!



Erode Minor Girl Case 4 Accuse Arrested on Pocso and Now Goonda Act Implemented

ஈரோட்டில் வசித்து வரும் 16 வயது சிறுமியின் கருமுட்டை சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் தாய்,, வளர்ப்புத்தந்தை, பெண் புரோக்கர் மாலதி, போலியான அடையாள அட்டையை தயாரித்துக்கொடுத்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ குழுவினர் நால்வரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினர். பெண் புரோக்கர் மாலதி மூலமாக கருமுட்டை கொடுக்கப்பட்ட மருத்துவமனையிலும் விசாரணை நடந்தது. இந்த விசாரணை அறிக்கையின் பேரில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. 

erode

இந்த நிலையில், சிறுமியின் தாய் உட்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை தொடர்ந்து 4 பேரின் மீதும் குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதுகுறித்த நகல் சிறை கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.