மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாட்டுவெடிகுண்டை கடித்த பசு 5 நாட்களாக மரண வேதனையில் துடித்து பலி.. ஈரோடு அருகே பரிதாபம்.!
மேய்ச்சலுக்கு சென்ற பசு நாட்டு வெடிகுண்டை கடித்து பரிதாபமாக துடிதுடித்து பலியான சோகம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம், பங்களாப்புதூர் புஞ்சை துறையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் மதன்குமார். இவர் பசுமாடு வளர்த்து வந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளது.
அப்போது, சமூக விரோதிகள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை பசுமாடு தவறுதலாக கடித்த நிலையில், அதன் வாய் சிதைந்து 5 நாட்களாக உயிருக்கு போராடி இருக்கிறது. நேற்று நாமக்கல் மாவட்ட கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பசுமாடு கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவர்கள் அதற்கான சிகிச்சை அளித்த நிலையில், வீட்டிற்கும் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் பசுவின் உயிர் பரிதாபமாக பிரிந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பங்களாபுதூர் காவல் நிலையத்தில் மதன் குமார் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.