மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திமுக ஆட்சியை கவிழ்க்கபோராடும் பாஜக.. உண்மையை உடைத்த ஈவிகேஎஸ் இளங்கோவன்..!!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றியடைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் அவ்வப்போது தமிழ்நாடு முதல்வருக்கு ஆதரவான பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது என்று பேசி இருந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், "தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வாக்குகளை பெற இயலாத பாஜக பல புதிய யுக்திகளை உருவாக்கி, திமுக தலைமையிலான ஆட்சிக்கு தொந்தரவு கொடுத்து வருகிறது.
பல பொய்யான தகவல்களையும் பரப்பி வருகிறது. ஆனால் இந்த சதியை தமிழக மக்கள் முறியடிப்பார்கள்" என்று தெரிவித்தார்.