மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னாள் காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை காட்டி திருமணத்தை நிறுத்திய காதலன் கைது!
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் நான்காவது தெருவை சேர்ந்த 18 வயது இளம் பெண் அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவரான முகமது யூனுஸ் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இதில் முகமது யூனிசுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அவரை விட்டு இளம் பெண் பிரிந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வைத்து மிரட்டி, அந்த பெண்ணிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை வாங்கியுள்ளார். இதனையடுத்து அவரது தொல்லை நீங்கியது என்று என்று நிம்மதி அடைந்த அந்த இளம் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனையறிந்த முகமது யூனுஸ் மீண்டும் அந்தப் பெண்ணை தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார். மேலும் எப்படியாவது அந்த பெண்ணின் திருமணத்தையும் தடுத்து நிறுத்த சதித்திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி மணமகன் குடும்பத்தாரிடம் இந்த புகைப்படங்களை காட்டி இளம் பெண்ணுக்கு நடத்தமிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இது குறித்து தட்டி கேட்ட அந்த இளம் பெண்ணை முகமது யூனுஸ் மற்றும் அவரது நண்பர்கள் மூவரும் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதனையடுத்து அந்த பெண் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.