திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெண் சிசுக்களை கருவிலேயே அழித்த ஓய்வு பெற்ற செவிலியர் கைது!
சிவகங்கை அருகே பெண் சிசுக்களை கருவிலேயே அழித்த ஓய்வு பெற்ற செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீப காலமாக தாயின் வயிற்றில் உள்ள கருவின் பாலினம் அறிந்து அழிக்கும் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண் பாலின சிசுக்கள் கண்டறியப்பட்டு சட்டவிரோதமாக கரு கலைக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற குற்ற செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டாலும், தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் சிவகங்கை சேர்ந்த காயத்ரி என்பவர் தன்னுடைய கருவில் உள்ளது பெண் குழந்தை என்பதை ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மூலம் அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்துள்ளார்.
இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது அவர் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஓய்வு பெற்ற செவிலியர் காந்திமதியிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் அவர் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து கலைக்கும் பணியை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.