திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடக்கொடுமையே... தோட்டத்தில் எல்லை மீறிய முன்னாள் ராணுவ வீரர்... காவல்துறையிடம் தஞ்சம் அடைந்த பெண்.!
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள அரியாகவுண்டம்பட்டி கொங்காளம்மன் கோயில் பகுதியைச் சோந்தவா் நீலா (35). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசு(50) என்ற முன்னாள் ராணுவ வீரரின் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று நிலா வழக்கம்போல் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது மது போதையில் இருந்த முன்னாள் ராணுவ வீரரான அன்பரசு நிலாவிடம் பாலியல் ரீதியாக சீண்டி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார்.
நிலா கொடுத்த புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் முன்னாள் ராணுவ வீரரான அன்பரசுவை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது.