குழாய் உடைந்து மழைநீராய் கொட்டிய நீர்; உண்மை தெரியாமல் நெட்டிசன்களிடம் பல்பு வாங்கிய முன்னாள் அமைச்சர்.!



ex-minister-sellur-k-raju-trolled-by-netizens

 

அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் தமிழ்நாடு அமைச்சருமானவர் செல்லூர் ராஜு. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் இடம்பெற்ற செல்லூர் ராஜு, நீர் ஆவியாகுவதை தடுக்க தர்மகோல் விட்டு கவனிக்கப்பட்டார். 

அன்றில் இருந்து இன்று வரை அவரின் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், அதனை கண்டுகொள்ளாது தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறார். அவ்வப்போது இவர் தனது சமூக வலைத்தளத்தில் அரசியல் சாராத பதிவுகளை இடுவது வழக்கம். 

இந்நிலையில், இன்று அவர் பதிவிட்ட வீடியோவில், மழை பெய்வது போலவும், இருவர் மட்டும் அதில் குளிப்பது போலவும் இருந்த காட்சிகளை பதிவிட்டு, "இயற்கையின் அற்புதம் அதிசியம் பார்ப்பது வியப்பாக இருக்கிறது" என எழுதி இருந்தார். 

ஆனால், அந்த வீடியோவை சரியாக கவனிக்கையில், வானத்தில் இருந்து உடைந்து செல்லும் குழாயில் இருந்து நீர் விழுவதும், அதில் இருவர் குளிப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அவரை நெட்டிசன்கள் வழக்கம்போல கலாய்த்து வருகின்றனர்.