திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிர்ச்சி! கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமமுக கட்சியின் பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) காலமானார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக செயல்பட்டுவந்தவர் வெற்றிவேல். இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்ததால் கொரோனா சந்தேகத்தின் காரணமாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டாா். பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், வெற்றிவேலின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அவரது நுரையீரலில் தொற்று அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவருக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டுவந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.