#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மித மிஞ்சிய போதை.. தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய கர்ப்பிணி மனைவி.. கச்சிதமாக வேலையை முடித்த கணவர்..!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த கோவிந்தபுரம் பகுதியில் வசித்து வந்தவர்கள் ராஜ்குமார் - நந்தினி தம்பதியினர். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ள நிலையில் நந்தினி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் சம்பவத்தன்று ராஜ்குமார் குடித்து விட்டு வீட்டிற்க்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி நந்தினி இனி குடித்துவிட்டு வந்தால் நான் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார்.
ஆனால் தலைக்கேறிய போதையில் இருந்த ராஜ்குமார் நீ என்ன தற்கொலை செய்து கொள்வது நானே உன்னை எரித்து விடுகிறேன் என்று கூறி கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து மகனை தூக்கிக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நந்தினியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு நந்தினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நந்தினியின் கணவரான ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைக்கேரிய போதையால் கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் கணவன் தீ வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.