#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோவில்பட்டி அருகே பரபரப்பு.. ஊருணியில் கிடந்த மூதாட்டியின் சடலம்.. போலீஸ் விசாரணை.!
கோவில்பட்டி அடுத்த இனாம்மணியாச்சி பகுதியில் இந்திரா நகர் ஓடை தெருவில் வசித்து வருபவர்கள் பெருமாள் சாமி - சரோஜினி தம்பதியினர். இந்நிலையில் சம்பவத்தன்று இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட செவல்குளம் ஊருணியில் சரோஜினி விழுந்து இறந்து கிடந்துள்ளார்.
இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஊருணியில் இறந்து கிடந்த பெருமாள் சாமியின் மனைவி சரோஜினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊருணியில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.