மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்..? முக்கிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு.!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
இதில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைப்பர் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்று வெளியாகியுள்ள கருத்து கணிப்புகளில், தமிழகத்தில் பெரும்பாலான கணிப்புகள் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தி.மு.க., கூட்டணி 160 க்கு மேற்பட்ட இடங்களிலும், அதிமுக 40-65 இடங்களிலும், அமமுக 4 - 6 இடங்களை கைப்பற்றலாம் என்றும், மக்கள் நீதி மய்யம் 2 இடங்களை கைப்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.