#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆசை ஆசையாக முகநூல் காதலியை பார்க்க வந்த நபர்... பின்னர் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்.!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அன்புச் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கும் திருச்சி காஜாமலை முஸ்லிம் தெருவைச் சேர்ந்த ரகமத் நிஷா என்ற பெண்ணுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு முகநூலில் பழக்கம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ரகமத் நிஷா வினோத் குமாரிடம் நான் உண்மையிலேயே உங்களை காதலிக்கிறேன். உங்களை நான் உடனே பார்த்தாக வேண்டும் என்று கூறி வினோத் குமாரை திருச்சிக்கு அழைத்துள்ளார்.
ஆசையாக காதலி அழைத்ததை நம்பி வினோத் குமாரும் தனது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு திருச்சிக்கு சென்றுள்ளார்.மன்னார்புரம் ராணுவ மைதானம் அருகில் இருந்தபடி ரகமத்நிஷாவை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது ஆட்டோவில் வந்த சில நபர்கள் வினோத் குமாரை கடத்தி 1 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு வினோத் குமார் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். அதனையடுத்து அந்த கும்பல் வினோத் குமாரின் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை வைத்து கொண்டு 1 லட்சம் கொடுத்து விட்டு வண்டியை எடுத்து செல்லுமாறு கூறி அனுப்பியுள்ளது.
இச்சம்பவம் குறித்து வினோத் குமார் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசாரும் அவர்கள் பாணியிலேயே ரூ.1 லட்சம் தயாராக இருப்பதாகவும், அதை வாங்கிக்கொண்டு வண்டியை தருமாறும் வினோத்குமார் மூலம் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் பேசவைத்துள்ளனர்.
அதனை நம்பி பணத்தைப் பெற வந்தபோது ரகமத்நிஷா, மற்றும் அவரது கூட்டாளிகளான வள்ளுவர்நகரைச் சேர்ந்த ஆசிக் (எ) நிவாஸ், பாலக்கரை முகமது யாசர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.