மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அயர்ந்து தூங்கிய கள்ளக்காதலி.! நள்ளிரவில் வந்த கள்ளக்காதலன்.! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்.!
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 46 வயது நிரம்பிய சாந்தி என்ற பெண் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தங்கி, தனியார் நிறுவனம் சார்பில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும், அதே பகுதியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த முத்து என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சாந்தி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடையில் படுத்து தூங்கி கொண்டிருந்துள்ளார். அதிகாலை 2 மணி அளவில் அங்கு வந்த முத்து, தான் கொண்டுவந்திருந்த பெட்ரோல் கேனை திறந்து தன் மீதும், அங்கு தூங்கி கொண்டிருந்த தனது கள்ளக்காதலி சாந்தி மீதும் ஊற்றியுள்ளார்.
பெட்ரோல் ஊற்றியவுடன் உடனடியாக எழுந்த சாந்திக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென எழுந்து பார்த்தபோது, பெற்றோலை தன் மீது ஊற்றியது மட்டுமல்லாமல், தீப்பெட்டியுடன் தன்னை எரிப்பதற்கு தயாராக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சாந்தி அவரை தடுப்பதற்குள், கண்ணிமைக்கும் நேரத்தில் முத்து கையில் இருந்த தீக்குச்சியை பற்றவைத்து சாந்தி மீது தீ வைத்துவிட்டார்.
சாந்தியின் உடலில் திடீரென தீப்பிடித்தது. முத்து மீதும் பெட்ரோல் ஊற்றி இருந்ததால், முத்துவின் உடலிலும் தீப்பிடித்துக்கொண்டது. இந்தநிலையில் இருவரின் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் கீழே விழுந்து இருவரும் அலறி துடித்தனர். இவர்களின் அலறல் சத்தம்கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரின் உடலிலும் எரிந்த தீயை அணைத்து, பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி, முத்து இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சாந்தி தனது கள்ளக்காதலன் முத்துவிடம் பேசுவதை தவிர்த்து, வேறு ஒருவருடன் பழகியதால் ஆத்திரம் அடைந்த முத்து, தனது கள்ளக்காதலி சாந்தியை உயிருடன் தீ வைத்து எரித்துக்கொன்று விட்டு, தானும் தீக்குளித்து உயிரிழந்தது தெரியவந்தது.