திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மெரினாவில் நெருக்கமாக இருக்கும் காதல் ஜோடிகளை குறிவைத்த போலி போலீஸ்காரர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
சென்னையில் உள்ள மெரினா கடற்கரைக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். அதிலும் விடுமுறை நாட்களில் எங்கு திரும்பினாலும் கடற்கரை முழுவதும் மக்களின் தலைகளாகவே தெரியும். அதற்க்கு ஏற்றாற்போல் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கும். இந்தநிலையில், மெரினாவில் காதல்ஜோடிகளை செல்போனில் படம் பிடித்து மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மணலி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்கிறார். இவர் ஓய்வு நேரத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கு வருவார். அங்கு காற்றுவாங்க வரும் காதல் ஜோடிகள் நெருக்கமாக இருப்பதை செல்போனில் படம் பிடிப்பார். பின்னர் தன்னை போலீஸ்காரர், என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, செல்போன் புகைப்படத்தை காட்டி காதல் ஜோடிகளை மிரட்டிவந்துள்ளார்.
மேலும், அவர்களிடம் உங்கள் பெற்றோருக்கு புகைப்படத்தை அனுப்பி விடுவேன், என்று மிரட்டியுள்ளார். உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும், என்றால் நீங்கள் எனக்கு பணம் தரவேண்டும் என மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இந்தநிலையில், சதீஷ்குமாரின் வலையில் சிக்கிய இளம்பெண் ஒருவரை, மிரட்டி சதீஷ்குமார், ரூ.2 லட்சம் வரை பறித்து பறித்துள்ளார்.
அந்த இளம்பெண் தான் வேலைபார்க்கும், அலுவலக நண்பர் ஒருவருடன் மெரினாவுக்கு வந்த போது, சதீஷ்குமாரின் வலையில் மாட்டிக்கொண்டார். அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டது. அதற்கு பிறகும் சதீஷ்குமார் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த இளம்பெண் தனது கணவரிடம் இதுகுறித்து கூறி அழுதுள்ளார்.
இதனையடுத்து தனது கணவர் உதவியுடன்,காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சதீஷ்குமாரின் லீலைகள் தெரிந்தது. அவர் போலீஸ் வேலை பார்க்கவில்லை என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இதே போல போலீஸ் வேடத்தில் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.