மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
6 வயது சிறுமியிடம் அத்துமீறிய போலி சாமியார் கைது.!
விழுப்புரம் அருகே 6 வயது சிறுமியிடம் அத்துமீறிய போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில் உள்ள புத்துவாய அம்மன் கோயிலில் நாள்தோறும் மாலை நேரத்தில் சாமியார் போல் உடைய அணிந்து தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதில், ரமேஷ் என்பவர் காவி உடை அணிந்து கோவிலுக்கு வரும் போதெல்லாம் சிறுமிகளிடம் அத்திமீறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ரமேஷ் வழக்கம் போல் சாமியார் போல் உடையணிந்து கோவிலுக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 6 வயது சிறுமியிடம் அத்துமீறி கண்ட இடங்களில் தொட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அங்கிருந்த பொதுமக்கள் சாமியார் வேடமணிந்து சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த ரமேஷுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.