மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அருள்வாக்கு கேட்க சென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார்!. பெண் எடுத்த அதிரடி முடிவு!.
சென்னை போரூர் அருகே வசித்து வரும் ராஜசேகர் என்பவர், மீஞ்சூர் அடுத்த தேவதானத்தில் உள்ள நிலத்தடி கருப்பசாமி கோயிலில் அமாவசை, பவுர்ணமி தினத்தில் அருள்வாக்கு கூறி வந்தார்.
இவரிடம் அருள்வாக்கு கேட்பதற்காக தடபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் கடந்த வாரம் கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச்சென்று பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற அந்த பெண் நேராக பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி சாமியார் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.