மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுச்சேரியை பீதியில் உறையவைத்த புலி.! மறந்திருந்து பார்த்த இளைஞர்கள் கண்ட காட்சி.!
புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் புலி உலாவி வருவதாக அப்பகுதி மக்களிடையே ஒரு தகவல் பரவி பீதியை ஏற்படுத்தி வந்தது. காட்டு பகுதியாக இருந்தாலும் புலி வரும். இது போன்ற ஒரு இடத்தில் எவ்வாறு புலி வந்திருக்கும் என்று பொதுமக்களிடையே சந்தேகம் ஏற்பட்டு வந்தது. உண்மையிலேயே இங்கு வலம் வருவது புலிதானா அல்லது வேறு யாராவது பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்கிறார்களா என்று அப்பகுதி இளைஞர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எனவே, அதை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டனர். அதற்கான நேரமும் வந்தது. புலி வருகிறது என்று சிலர் கூச்சலிட்டுக்கொண்டு அங்கு மிங்கும் வேகமாக ஓடினார்கள். இதை கேட்ட இளைஞர்கள் புலி இருப்பதாக கூறப்பட்ட இடத்திற்கு சென்று மறைந்து இருந்து புலி என்று குறிப்பிட்ட அந்த விலங்கை பார்வையிட்டனர் அப்போதுதான் தெரிந்தது அது புலி இல்லை புலி போல தோற்றத்தில் இருந்த ஒரு நாய் என்பது தெரியவந்தது.
அதே பகுதியில் வசிக்கும் சில குறும்புக்கார நபர்கள் தெரு நாயை பிடித்து அதன் உடலில் புலியைப் போல கோடுகளை வரைந்து அந்த நாயை வீதியில் விட்டு உள்ளனர். இந்த நாயை பார்த்து தான் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக அப்பகுதி பொதுமக்கள் பயந்து வந்துள்ளனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த வேலையை பார்த்த விஷமிகள் யார் என்று போலீசார் அவர் தேடி வருகின்றனர்.