மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீன்குழம்பால் வந்த பெரும் சோதனை! மொத்தமாக அழிந்த குடும்பம்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் வசித்து வந்தவர் பிரபு. இவரது மனைவி அம்மு. இவர்களுக்கு இரு மகன்கள் இருந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பிரபு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் அம்மு, தனது சிறுகுழந்தைகள் மற்றும் மாமியார் மீனாவுடன் வசித்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்று காலை அம்முவிடம் மாமியார் மீனா மீன் குழம்பு சமைத்து தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த அம்மு, தனது இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
மேலும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய மீனாவை அக்கபக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அம்மு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவ அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.