மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்பத் தகராறு.. இளம்பெண் தற்கொலை.. தீவிர விசாரணை..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவிரி பகுதியில் வசித்து வந்தவர்கள் நாகராஜ் - ஜெயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
இதனையடுத்து ஜெயலட்சுமி எருமபாளையத்தை சேர்ந்த தமிழ்ழகன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு உள்ளார். இவர்கள் இருவரும் அம்மாபேட்டை பூவாத்தாள் தெருவில் குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயலட்சுமியின் மூத்த மகள் சமீபத்தில் நடந்த தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த தமிழழகன் மனைவி மற்றும் மகளுடன் சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையானது ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
இதனால் மனவேதனையில் இருந்த ஜெயலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் ஜெயலஷ்மியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.