மகன் இறந்த சோகம் தாங்கமுடியாமல் குடும்பமே தற்கொலை! அதிர்ச்சி சம்பவம்!



family suicide for son death

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே நவல்பட்டு பூலாங்குடி பகுதியை சேர்ந்தவர் விஜயகவுரி. ஓய்வு பெற்ற ஆசிரியையான இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். கடந்த 10 மாதத்திற்கு முன்பு விஜயகவுரியின் மகன் விஜயகுமார் லாரி மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயம் அடைந்த அவர் கடந்த 8 மாதமாக கோமாவில் இருந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விஜயகுமாரை விஜயகவுரி வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் அவர் படுத்த படுக்கையாகவே இருந்த நிலையில் நேற்று மாலை விஜயகுமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் விஜயகவுரி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். உடனே 108 ஆம்புலன்ஸ் விஜயகவுரியின் வீட்டிற்கு வந்து, விஜயகுமாரை பரிசோதித்து விட்டு, அவர் இறந்து விட்டதாக கூறிச்சென்றனர்.

இதனையடுத்து விஜயகுமாரின் தாய் விஜயகவுரி மற்றும் அவரின் இரண்டு மகள்களும் கடும் சோகத்திலும் மன உளைச்சலிலும் தவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு இவர்களது வீட்டிலிருந்து பலத்த சத்தத்துடன் வெடித்த சத்தம் கேட்டுள்ளது.

son

சத்தம் கேட்டதை அறிந்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த விஜயகுமாரின் சடலத்துடன் சேர்த்து ஜெயகௌரி, விஜயவாணி, விஜயலட்சுமி ஆகிய 3 பேரின் சடலங்களும் தீயில் எரிந்து கிடந்தன. 

விசாரணையில் மகன் இறந்த துக்கத்தில் இருந்த விஜயகவுரியும் அவருடைய மகள்களும் விஜயகுமாரின் உடலை கட்டிப்பிடித்துக்கொண்டு கியாஸ் சிலிண்டரை வெடிக்கச்செய்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மகன் இறந்த துக்கத்தில் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.