மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வருடங்களுக்கு முன்பு தல அஜித்துக்கு காதலியாக நடித்த நடிகை!! மீண்டும் நடிகையாக வருகிறார்!!
2002ல் வெளிவந்த, இயக்குனர் எழில் இயக்கிய "ராஜா" படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும், மற்றும் முன்னணிக் கதாபாத்திரத்தில் பிரியங்கா திரிவேதியும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் அஜித்தின் காதலியாக நடித்தவர் பிரியங்கா திரிவேதி.
அதனையடுத்து விக்ரம் ஜோடியாக ‘காதல் சடுகுடு’ மற்றும் அருண் விஜய்யுடன் ‘ஜனனம்’ ஆகிய படங்களில் நடித்த பிரியங்கா திரிவேதி, கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு சென்றார்.
இந்நிலையில் தற்போது 15 வருடங்கள் கழித்து பிரியங்கா திரிவேதி மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைகிறார். பிக்பாஸ் மஹத் மற்றும் யாஷிகா ஜோடியாக நடிக்கும் படத்தில் பிரியங்கா திரிவேதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகி வருகிறது.
வெங்கடேஷ் இயக்கத்தின், தமன் இசையில் தமிழ் மற்றும் கன்னடத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.