3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
பிரபல யூடியூபர் மற்றும் பாடி பில்டர் ஜோ லிண்டர் திடீர் மரணம்... வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஜெர்மனியைச் சார்ந்த யூடியூப் பாடி பில்டர் ஆன ஜோ லிண்டர் தனது முப்பது வயதில் மரணம் அடைந்த சம்பவம் உலகையே அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இவரது மரணத்திற்கு அணியூரிசம் என்ற நோய் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தற்காலத்தில் சமூக வலைதளங்களின் மூலம் தங்களது திறமைகளை வெளிக்காட்டி ஏராளமானவர் பிரபலமாகி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் ஜோ லிண்டர். ஜெர்மனியைச் சேர்ந்த இவர் பாடி பில்டிங் மற்றும் அதன் பயிற்சி வீடியோக்களை தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து மக்களிடம் பிரபலமானவர்.
பல லட்சக்கணக்கான பாலோயர்ஸ் மற்றும் சப்ஸ்கிரைபர்களை கொண்ட இவர் சமூக வலைதளங்களில் மூலமாக உடற்பயிற்சி ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கி வந்தார். ஜோஸ்தெடிக்ஸ் என்ற தனது பயிற்சி முறைகளில் மூலமாக பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கியவர் இவர். அவரது காதலியும் நண்பருமான நிச்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ஜோ லின்டர் அணியூரிசம் நோயின் மூலம் மரணம் அடைந்ததை தெரிவித்துள்ளார். இது உலகெங்கிலும் உள்ள பாடி பில்டர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
அனியூரிசம் என்பது ரத்த நாளங்களின் சுவர்களில் ஏற்படும் பலவீனத்தால் வரும் நோயாகும். இதன் காரணமாக ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடும். இதனால் நரம்புகள் வெடித்து உள்புற ரத்தப்போக்கு அல்லது பக்கவாதம் ஏற்படலாம். பார்க்கின்சன் நோயும் வரலாம். இந்த நோய்க்கு என்று தனியாக அறிகுறிகள் எதுவும் இல்லை. இந்த நோய் தாக்கிய பின்னரே அதற்கான தாக்கத்தை உணர முடியும்.