பெரும் சோகம்... இரவு சிக்கன் சாப்பிட்ட தந்தை, மகள்... அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்!! போலீசார் விசாரணை



father-and-daughter-died-after-eating-chicken

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரியபொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆனந்த் - பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு மதுஸ்ரீ என்ற 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆனந்த் சொந்தமாக கோழிப்பண்ணை வைக்கலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று இரவு சிக்கன் எடுத்து சமைத்து ஆனந்த் மற்றும் அவரது மகள் இருவரும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குழந்தை மதுஸ்ரீ மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே குழந்தையை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. 

chicken

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆனந்த் அடுத்த நொடியே மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கன் சாப்பிட்டு தந்தை, மகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.