மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த போதை தந்தை! ரத்தவெள்ளத்தில் கிடந்த சடலம்!!
ஆந்திர மாநிலத்தில் வசித்து வருபவர் பூசிராஜு. இவருக்கு நரசம்மா என்பவருடன் 16 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் பூசிராஜுக்கு மதுப்பழக்கம் மற்றும் கஞ்சா போன்ற பழக்கம் ஏற்பட்டு போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால் வீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.
இதனால் நரசம்மா தன் குழந்தைகளோடு வீட்டை விட்டு வெளியேறி அவரது சகோதரருடன் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் மூத்த மகளான 13 வயதுடைய மஞ்சுளாவை அருகில் இருக்கும் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.
பின்னர் வேலை முடிந்தவுடன் நரசம்மாவே மாலையில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வருவார். இதற்கிடையே வழக்கம் போல் மகளை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சென்ற நரசம்மாவிடம் ஏற்கனவே மஞ்சுளாவை அவரது தந்தை வந்து அழைத்துச் சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
இதற்கிடையே மஞ்சுளாவை அழைத்துச் சென்ற பூசிராஜு பாறைகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக பாறையில் மோதி கொலை செய்துள்ளார். பின்ன அங்கு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மஞ்சுளாவை பார்த்த நரசம்மா கதறி அழுதுள்ளார்.
முன்னதாகவே பூசிராஜூ மாதத்திற்கு ஒரு குழந்தையை நான் கொலை செய்து விடுவேன் என்று கூறியிருந்தார். நிஜமாகவே இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று நரசம்மா கூறியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிசிடிவி கேமராவை பார்த்ததில் பூசிராஜு தான் தனது மகள் மஞ்சுளாவை அழைத்து சென்றிருக்கிறார் என்பது உறுதியானது. இதை தொடர்ந்து பூசிராஜுவை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைந்தனர்.