திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மகன் வெளியூரில் இருக்க மருமகளிடம், மாமனார் செய்த காரியம்! வலைவீசும் காவல்துறையினர்!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வல்லியம்பட்டியில் வசித்து வரும் தம்பதியரில் இளம் பெண்ணுக்கு 20 வயது ஆகிறது. இவரது கணவர் கேட்டரிங் முடித்து அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், இளம்பெண் கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அப்பொழுது வீட்டில் தனியாக இருக்கும் இளம்பெண்ணிடம் அவரது மாமனார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இச்சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் இது குறித்து விசாரணை நடத்த காவல் துறையினர் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
பின்னர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார், அதனை கண்டுகொள்ளாத மாமியார் மற்றும் கணவர் ஆகிய மூன்று பேரும் மீதும் வழக்கு பதிவு செய்து, தலை மறைவானவர்களை தேடி வருகின்றனர்.