மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே... பச்சிளம் குழந்தைடா... வரதட்சணை கொடுமையால் இளம்பெண்ணுடன் சேர்ந்து 2 வயது குழந்தைக்கு நிகழ்ந்த சோகம்...
தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன்(60). இவர் அப்பகுதியில் உள்ள திராட்சை தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரின் மகன் அருண்பாண்டியன்(29).
அருண்பாண்டியன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவப்பிரியா(25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிவப்பிரியா இல்ல தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் சிவப்பிரியா காதல் திருமணம் செய்து வந்ததால் வரதட்சணை கிடைக்கவில்லை என்று அருண்பாண்டியன் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். நேற்றிரவு வரதட்சணை பிரச்சனையில் மருமகள் மற்றும் மாமனாருக்கு இடையே சண்டை முற்றியுள்ளது.
அதில் கோபமான மாமனார் பெரியகருப்பன் மருமகள் மற்றும் பேரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய தாய் மற்றும் மகனை தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே 2 வயது பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சிவப்பிரியா உயிருக்கு போராடி வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளியான பெரியகருப்பனை கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.