மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புருஷன் இருக்கும்போதே உனக்கு 2ம் கல்யாணமா? ஆவேசப்பட்ட தந்தையின் அனல்பறக்கும் செயலால் பறிபோன உயிர்.!
கணவன் இருக்கும்போதே, தனது மகள் இரண்டாவது திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை, அவமானம் தாங்க முடியாமல் மகளை வெட்டி கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகாமையில் தாதன்குளம் பகுதியில் வசித்து வருபவர் சுடலைமுத்து. இவருக்கு மீனா என்ற மகள் இருந்த நிலையில், 17 வயதிலேயே அவருக்கு இசக்கிபாண்டியன் என்பவரை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
தொடர்ந்து இசக்கிபாண்டியன்-மீனா தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மீனா தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு இளைஞரை திருமணம் செய்துள்ளார்.
ஆனால், இது மீனாவின் தந்தைக்கு தெரியவர, தனக்கு அவமானம் நேர்ந்து விட்டதாக உணர்ந்த சுடலைமுத்து அவர் மீது ஆவேசத்தில் இருந்து வந்துள்ளார். மேலும், மகளுக்கு திருமணமாகி 10 மாத காலம் சென்ற நிலையில், அவர் உறவினரை பார்க்க ஊருக்கு வந்துள்ளார்.இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த மீனாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் நேரில் சென்று மீனாவை திட்டி தீர்த்துள்ளனர். இருப்பினும் ஆத்திரத்தை அடக்க முடியாத சுடலைமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மகள் என்றும் பாராமல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரதாபமாக உயிரிழந்த நிலையில், தற்போது சுடலைமுத்துவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அத்துடன் இந்த சம்பவமானது அப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.