அந்த பிஞ்சு உசுரு எப்படி துடிச்சிருக்கும்!! மகன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த தந்தை.. பதறவைக்கும் சம்பவம்..



Father killed own son viral news

குடிபோதையில் மகன் மீது கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிபாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். குடிக்கு அடிமையான முருகன் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுவந்தநிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் குடித்துவிட்டுவந்த முருகன், குடிபோதையில் அங்கிருந்த கல்லை தூக்கி மனைவி என நினைத்து வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்த  14 வயது மகன் அர்ஜுன் தலையில் போட்டுள்ளார்.

இதில் அர்ஜுன் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தநிலையில், தலைமறைவாக உள்ள முருகனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.