திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை.. தாய் போலீசில் புகார்.!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே 27 வயது பெண் ஒருவர் தனது கணவர் இறந்துவிட்ட நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து மேலும் அவர்களுடன் தனது இரு மகள்களும் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த பெண் வேலைக்கு சென்ற போது சுரேஷ்குமார் தனது மனைவியின் 13 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருந்து கரு கலைந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக குழந்தைகள் நல அலுவலர் சியாமளா என்பவர் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் சுரேஷ்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சுரேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.