#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வேற லெவல்... ஒரே பேரூராட்சியில் தந்தை, மகன், மகள் வெற்றி.! எந்த கட்சி தெரியுமா.?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, சென்னை, தஞ்சாவூர், திருச்சி மாநகராட்சிகளில் தலா ஒரு வார்டு,33 நகராட்சி வார்டுகள், 66 பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 102 வார்டுகளில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுககைப்பற்றியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடியில் அப்பா, மகன், மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஏரல் பேரூராட்சியில் அமமுக சார்பில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் வெற்றி பெற்றுள்ளனர். அமமுக சார்பில் ஏரல் பேரூராட்சியின் 15 ஆவது வார்டில் போட்டியிட்ட தந்தை ரமேஷ், 1 ஆவது வார்டில் போட்டியிட்ட மகன் பாலகௌதம், 2 ஆவது வார்டில் போட்டியிட்ட மகள் மதுமிதாவும் வெற்றி பெற்றுள்ளனர்.