"முத்திய பழங்கள் சாராயத்திற்கு ஏங்க, முத்தான பழங்கள் விற்கும் முந்திரி" - நெகிழவைக்கும் நிகழ்வு.!



FB User Post about Children Selling Cashew Fruits 


தமிழகமே தலைநிமிர்வாய் என்று நாம் மாறைத்தட்டி கூவினாலும், திரைமறைவில் இன்றைய இளம் தலைமுறையின் எதிர்காலம் என்பது போதைப்பொருள், சினிமா மோகம், ரீல்ஸ் வீடியோ என முடங்கிக்கிடக்கிறது. தொழில்நுட்பத்தின் தாக்கம் பல உளவியல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்திவிட்டது.

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பதை போல, ஏழ்மை நிலை மற்றும் வறுமையின் தாக்கம் என்பது எந்த மாற்றமும் இல்லாமல் பல இன்னல்களுடன் தொடருகிறது. கோடைகாலத்தில், சிறுவயதில் ஓடி விளையாடும் சிறார்கள், தங்களின் குடும்ப எதிர்காலத்திற்காக அவர்களின் பெற்றோரை போல கடும் உழைப்புக்கும் தள்ளப்படுகின்றனர். 

கஷ்டத்திலும் முன்னேற்றம்

இது அவர்களின் வாழ்க்கையை கஷ்டத்திலும் முன்னேற்ற உதவும் எனினும், சரியான பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய முந்தைய தலைமுறை டாஸ்மாக் வாசலில் 12 மணிக்கு முன்பே கட்டிங், குவாட்டர் என காத்திருக்கிறது. இதனை ஒருவர் உவமைப்படுத்தி தற்போது பதிவுட்டுள்ள முகநூல் பதிவு வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: போனில் ஆடர் செய்தால் வீட்டிற்கே வரும் போதைப்பொருள்; சென்னையில் 4 பேர் கும்பல் கைது..!

அந்த பதிவில், முத்திய பழங்கள் எல்லாம் மதுக்கடையில் வரிசையில் நிற்க, வேகாத வெயிலில் முத்தான பழங்கள் முந்திரிப்பழம் விற்கிறது" என குறிப்பிட்டுள்ளார். முந்திரிப்பழம் கடலூர், பண்ரூட்டி, உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதானமாக உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படுகிறது. முந்திரி மரங்களில் இருந்து கிடைக்கும் முந்திரி பழத்திற்கு மவுசு அதிகம்.

இதையும் படிங்க: #Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் பெய்யப்போகும் பேய்மழை; மஞ்சள் & ஆரஞ்சு எச்சரிக்கை..!