பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
போலி வாரிசு சான்றிதழை கொண்டு நிலவியாபாரம்.. அரசியல் பிரமுகர் கைது.!
போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து நிலத்தை விற்ற பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசியல் பிரமுகர் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனியில் வசித்து வந்த ஹரி, தபால் துறையில் ஊழியராக பணியாற்றியுள்ளார். இவரின் மனைவி லீலாபாய். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், உடல்நிலை குன்றி ஹரி இறந்து விட்டதால், அவரது மனைவிக்கு தபால் துறை வேலை வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து லீலாபாய், தர்மலிங்கம் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இளையராணி என்ற ஒரு மகளும் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தர்மலிங்கம் இறந்ததால், இளையராணியுடன் மீராபாய் வடபழனியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு லீலாபாயும் இறந்துவிட்டார். இதனால் கூடுவாஞ்சேரி காளஹஸ்தியில் உள்ள நிலத்தை மூன்று பங்காகப் பிரித்து எடுத்துக் கொள்ள சரவணன், இளையராணி மற்றும் டில்லிகுமார் ஆகிய மூவரும் முடிவு செய்தனர்.
ஆனால், நகை, பணம் மற்றும் பத்திரங்களுடன் இளையராணி வீட்டை பூட்டி விட்டு திடீரென காணாமல் போய்விட்டார். இதுதொடர்பாக இளையராணியின் சகோதரர்கள் இருவரும் வடபழனியில் புகார் அளித்தனர். பின்னர் போலீசாரின் விசாரணையில் சொத்தைப் பிரித்துக் கொடுப்பதாக கூறிய இளையராணி சொத்தைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால் சகோதரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள நிலத்திற்கு வில்லங்க சான்றிதழ் எடுத்துள்ளனர். சான்றிதழில் நிலம் வேறொரு நபருக்கு விற்கப்பட்டது என தெரியவந்தது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராணியின் சகோதரர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து இளைய ராணியிடம் வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன் நடத்திய விசாரணையில், அவர் போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து நிலத்தை விற்றது தெரிய வந்துள்ளது. மேலும், போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து, மோசடிக்கு உடந்தையாக இருந்தது அரசியல் பிரமுகரான கிச்சா ரமேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே போலீசார் இவர்கள் இருவர் மீதும் மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.