மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமிகள்.. அத்தை உட்பட 6 பேர் கைது .! பாய்ந்தது குண்டர் சட்டம்.!
திருச்சி பாலக்கரை பகுதியில் சிறுமிகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் சிறுமியின் அத்தை உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாநகரம் பாலக்கரை கீழபுதூர் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையை விசாரணையில் ஈடுபட்ட போது சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அபிநிஷா, ரவிக்குமார், அசோக் மற்றும் பானு உட்பட ஆறு நபர்கள் சிறுமிகளை மிரட்டி பிரச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததை காவல்துறையினர் உறுதி செய்தனர். இது தொடர்பாக அந்த ஆறு நபர்களையும் கைது செய்த காவல்துறை அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் இதில் பியரி பானு என்ற பெண் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு சிறுமியின் அத்தை என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல்துறை ஆணையர் காமினி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.