ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தமிழகத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் ஜனவரி 15ல் வெளியீடு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதால் இரண்டு முக்கிய கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தங்களது தேர்தல் பணிகளை தெடங்கிவிட்டன. மேலும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையமும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஆம் ஆண்டு(அடுத்த ஆண்டு) ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை பெயர் சேர்ப்பு, பெயர் நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதலை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.