மாரடைப்பால் உயிரிழந்த கபடி பயிற்சியாளர் குடும்பத்திற்கு நிதியுதவி.! தமிழக முதல்வர் அறிவிப்பு!!



Finance assistance to Kapadi coach who dead in heart attack

கரூர் மாவட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கபடி பயிற்சியாளரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து மற்றும் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், குளித்தலை வட்டம் சத்தியமங்கலம் கிராமம் கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்கள் இடையேயான கபடி போட்டி விளையாட்டிற்கு வந்திருந்த சிறுவர்களை அழைத்து வந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம், பாளையம் அஞ்சல் கரிச்சிகாரன்பட்டியைச் சேர்ந்த பயிற்சியாளர் திரு.மாணிக்கம் த/பெ தங்கவேல் (வயது 26) என்பவர் சிறிது நெஞ்சுவலி இருந்தும் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளார். 

போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவரை அய்யர்மலை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 

உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.