மரணத்தின் விளிம்பிற்கு சென்றவர்களை காப்பாற்றிய தமிழ் சிங்கங்கள்! மெய்சிலிர்க்கவைக்கும் வீடியோ!



fire service man saved 2 peoples


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவனை மீட்டு முதல் உதவி செய்து சிறுவன் உயிரை காப்பாற்றிய திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

ஈரோடு மாவட்டம், பழையபாளையத்தை சேர்ந்த திருமூர்த்தி என்ற விவசாயியின் மகன் கிருஷ்ணன் நான்காம் வகுப்பு படித்துவந்துள்ளான். இவர்களது குடும்பத்தினர் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த, பட்லூர் காவிரி ஆற்றில், புனித நீராட நேற்று சென்றுள்ளனர்.

அப்போது, ஆற்றின் வேகத்தில் இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் மோகன், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத போதும் ஆற்றில் குதித்து தந்தையும், மகனையும் மீட்கப் போராடினார். 

தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின், திருமூர்த்தியையும், அவரது மகனையும்‌ மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மூச்சு, பேச்சின்றி கிடந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த தீயணைப்புத்துறையினர், அவர்களது மீட்பு வாகனத்திலேயே கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். 

தக்க சமயத்தில் பார்த்து இருவரையும் மீட்டதுடன், முதலுதவி செய்ததாலேயே, தந்தை, மகன் உயிர் பிழைக்க முடிந்தது. தீயணைப்பு வீரர்களின் இந்த செயலுக்கு, பொது மக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.