கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட தீயணைப்பு துறை வீரர்கள் பிளாஸ்மா தானம்!



fire service mans Plasma donation

தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த பிளாஸ்மா வங்கியில் கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட பலர் பிளாஸ்மா தானம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், கொரோனாவில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் 29 பேர் நேற்று பிளாஸ்மா தானம் வழங்கினர். 

தமிழகத்தில் இதுவரை 225  பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிளாஸ்மா தானம் செய்த தீயணைப்பு வீரர்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பாராட்டி, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். 

plasma donation

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், போலீசாரை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இதுவரை 140 பேரிடம் இருந்து பிளாஸ்மா தானமாக பெறப்பட்டு, 225 பேருக்கு பிளாஸ்மா தானமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிளாஸ்மா வங்கி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.