மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி!! தமிழகத்தில் முதல் உயிரை பலிவாங்கியது கருப்பு பூஞ்சை நோய்!! கருப்பு பூஞ்சை நோயின் முக்கிய அறிகுறிகள் இதோ!!
கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது கருப்பு பூஞ்சை என்னும் நோய் பல இடங்களில் மக்களை தாக்கிவருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கட்டுப்பாடு இல்லாத அளவுக்கு இரத்த சர்க்கரை நோய் உள்ளவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இந்த கருப்பு பூஞ்சை தொற்று தாக்குகிறது.
தலைவலி, காய்ச்சல், சைனஸ் மண்டலத்தில் பாதிப்பு, கண்களுக்கு கீழ் வலி மற்றும் பகுதியளவில் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையியல் கொரோனவால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த நபர் ஒருவர் இந்த கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் திடீரென உயிரிழந்துள்ளார். கருப்பு பூஞ்சை நோயினால் தமிழகத்தில் ஏற்படும் முதல் மரணம் இதுவாகும்.