53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
காதலியுடன் உல்லாசம்.. பின்னர் பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு.. இறுதியில் விசியம் வெளிடச்சத்திற்கு வந்ததால் இளைஞர் தற்கொலை..!
சென்னை வடபழனியில் வசித்து வருபவர் சூர்யா என்ற இளம் பெண். இவர் தனது பள்ளி பருவத்தில் இருந்தே நிஷாந்த் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து பயின்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் நிஷாந்த் சூர்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சூர்யாவிடம் இருந்து 68 லட்சம் பணத்தை சிறிது சிறிதாக பெற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கு இடையில் நிஷாந்த் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையின் சிஇஓ மகளை திருமணம் செய்து கொள்ள போவதாக சூர்யாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆதாரத்துடன் காவல் நிலையம் சென்ற சூர்யா நிஷாந்த் தன்னை ஏமாற்றியது தொடர்பாக போலீசிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் நிஷாந்த் மீது கொடுக்கப்பட்ட புகார் உண்மையானதையடுத்து தொழிலதிபர் மகளுடன் நிஷாந்த்க்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நிஷாந்த் போலீசாருக்கு பயந்து போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை மீட்க்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தான் இறப்பதற்கு முன்பு தனது நண்பர்களுக்கு தான் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.