திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கணவர் மர்மம் மரணம்.. கதறும் மனைவி!
தஞ்சாவூர் மாவட்டம் மனோஜிபட்டியை சேர்ந்தவர் பேரரசி. இவர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு தற்போது 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இதில் சசிகுமார் கடந்த 4 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இதில், கடந்த 5ம் தேதி சசிகுமார் தனது மனைவியிடம் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.
இந்த நிலையில் 6ம் தேதி சசிகுமார் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து அவரது மனைவியை தொடர்பு கொண்ட ஊழியர்கள், சசிகுமார் இறந்து விட்டதாக கூறி அழைப்பை துண்டித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பேரரசி மீண்டும் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெற முயன்றுள்ளார்.
ஆனால் அந்த நிறுவனம் அவரது அழைப்பை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் போன் செய்த ஊழியர்கள் சசிகுமாரின் உடல் அழகிய நிலையில் உள்ளதால் உடலை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என கூறியுள்ளனர்.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த பேரரசி, தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தனது கணவரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.