திமுக முன்னாள் எம்எல்ஏ நைனா முகம்மது காலமானார்.! சோகத்தில் திமுக மற்றும் அதிமுகவினர்!



former-dmk-mla-passed-away

கடையநல்லூர் தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் நைனா முகம்மது மாரடைப்பால் இன்று காலமானார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதியில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் திமுகவின் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார் நயினா முகமது.

 2001ம் ஆண்டு திமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். சுமார் 17 ஆண்டுகள் அதிமுகவின் மாவட்ட சிறுபான்மை பிரிவு மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார் நயினா முகமது.

dmk mla

தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற அதிமுக அரசு ஆதரவு அளித்ததால், கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தற்போது, அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.