திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒத்துழைப்பு, உழைப்பு, ஆள-வாழ; ரைமிங்காக பேசி கட்சி நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சியூட்டிய ராஜேந்திர பாலாஜி.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் நடைபெற்ற அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கட்சியின் நிர்வாகிகளிடையே புத்துணர்ச்சியூட்டும் வகையில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "நமது அதிமுக இயக்கம் ஆலமரமாக, விருட்சமாக இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் நாம் அணிதிரண்டு நிற்கிறோம். அதிமுகவை கண்டு திமுகவுக்கு பயம் உள்ளது.
வெற்றி என்பது நம்மை நோக்கி வருகிறது. நம் பக்கம் மட்டுமே வெற்றி இருக்கிறது. அதனை தக்க வைக்கும் கடமை நமக்கு உள்ளது. இயக்கத்திற்காக நீங்கள் இன்று ஒருதுளி வியர்வை சிந்தினால், உங்களின் வளர்ச்சிக்காக நான் 100 சொட்டு வியர்வை சிந்த தயாராக இருக்கிறேன்.
நமது அடுத்த இலக்கு டெல்லி பாராளுமன்றம், அதனை தொடர்ந்து சட்டமன்றம் என இருக்க வேண்டும். அதிமுக ஆள வேண்டும், தமிழக மக்கள் வாழ வேண்டும், அதற்கு நாம் உழைக்க வேண்டும். உங்களின் ஒத்துழைப்பு, உழைப்பு ஆகியவற்றை இயக்கத்திற்காக முன்வையுங்கள். உங்களின் வளர்ச்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.