காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
பட்டப்பகலில் கொள்ளையர்கள் வீடு புகுந்து முன்னாள் பெண் மேயர், அவருடைய கணவர் உள்பட 3 பேரை கொடூர கொலை!
நெல்லையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை கும்பல் தாக்கியதில் தி.மு.க. முன்னாள் பெண் மேயர், அவரது கணவர் ஆகியோர் கொல்லப்பட்டனர். அவர்களுடன் இருந்த பணிப்பெண்ணும் பலியானார்.
நெல்லையில், திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டில், உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன்(65)மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பணிப்பெண் மாரி வயது 30 இவர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருகிறார் விதவைப் பெண்ணான இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவர் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி வீட்டில் பணிபுரிந்துவந்துள்ளார். இந்தநிலையில் பணிப்பெண்ணையும் கொலைசெய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 1996 ல் உமா மகேஸ்வரி திமுக சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை இவருக்கு உண்டு.