பகலில் அழுக்குச்சட்டையுடன் பிச்சைக்காரன்! நள்ளிரவில் பெண்களுடன் குஜால்!
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அத்திரிமலையில் அமைந்துள்ளது கோரக்கநாதர் கோவில். இந்த கோயிலுக்கு போக வேண்டுமென்றால் கல்லாற்றை கடந்து தான் போக வேண்டும்.
இந்தநிலையில் கல்லாற்றின் பக்கத்தில் ஒரு ஓலை குடிசை இருந்த நிலையில் இரவில் இங்கு நடமாட்டம் இருப்பதாக அறிந்த வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சுப்ரமணி என்ற நபர் வனத்துறையினரிடம் சிக்கினார்.
சுப்ரமணி பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்ததால் அவரை எச்சரித்த அதிகாரிகள் இங்கெல்லாம் வரக்கூடாது என கூறி சுப்ரமணியை விரட்டியுள்ளனர். ஆனாலும் அப்பகுதியில் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது. அதனால் வனத்துறையினர் ரகசியமாக சுப்ரமணியை கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் நள்ளிரவில் கையும் களவுமாக சிக்கிய சுப்ரமணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் காட்டுக்குள் குடிசை அமைத்து தங்கி வந்தது தெரியவந்தது. மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது சுப்ரமணி பகலில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து, ரயில்களில் கொள்ளை அடிப்பதும்,மேலும் அழுக்கு உடையுடன் ரயிலில் ஏறி பிச்சை எடுப்பதும், அப்போது தனியாக பெண்கள் மட்டும் இருந்தால் செயினை பறிப்பார் என்பதும் தெரியவந்தது.
இவ்வாறு கிடைக்கும் பணத்தில் கஞ்சா அடிப்பது, பெண்களை காட்டுப்பகுதி குடிசைக்கு இரவு நேரங்களில் அழைத்து வந்து ஜாலியாக இருப்பது என கடந்த ஐந்து வருடங்களாக இருந்துள்ளார் சுப்ரமணி. இதனையடுத்து சுப்ரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.