மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட 4 பேர் கைது.! காவல்துறை அதிரடி நடவடிக்கை.!
தமிழக அரசு குட்கா மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் குட்கா பொருட்களை கடத்திய நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் குட்கா பொருள்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் அவற்றை வியாபாரிகள் கடத்தி வந்து விற்பனை செய்வதாகவும் காவல்துறை ரகசிய தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது குட்கா பொருட்களை கடத்தி வந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பெருமளவில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் ராதாபுரம் தொகுதி துணைச்செயலாளர் ராமச்சந்திரன் என்று தெரிய வந்தது. மேலும் அவருடன் இணைந்து கடத்தலில் ஈடுபட்ட அவரது மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.
புகையிலை மற்றும் குட்கா பொருள் கல் தடை செய்யப்பட்டது முதல் தமிழகத்தில் காவல்துறை தீவிரமான சோதனைகளில் ஈடுபட்டு அவற்றை விற்பனை செய்து வரும் வியாபாரிகளையும் புகையிலைப் பொருட்களை கடத்தி வருபவர்களையும் கைது செய்து கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.