மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம்.. பல பெண்களை ஏமாற்றிய மன்மத கேடி இளைஞர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கீதா. இவர் புதுப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் தனது பெற்றோருடன் தங்கியிருந்து, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளி விடுமுறைக்காக கீரிப்பாறை அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஆரல்வாய்மொழி பாரதிநகரை சேர்ந்த கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவரின் வீட்டின் அருகே கீதாவின் பாட்டி வீடு இருந்துள்ளது. இதனால் பிரகாசுக்கும், கீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாலடிவில் காதலாக மாறியதால், அடிக்கடி கீதாவை படிக்கல் அழைத்துச் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பள்ளிக்கு சென்ற கீதா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தால் கீதாவின் பெற்றோர் புதுப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிரகாஷ் தனது பெற்றோர் உதவியுடன் கீதாவை கடத்தி திருப்பூருக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
மேலும், தனிமையில் இருந்த கீதாவை, பிரகாஷ் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரகாஷின் பெற்றோர் கீதாவை அழைத்து வந்து பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் மாணவியின் பெற்றோரிடம் விட்டு சென்றனர். இதனிடையே பிரகாஷ் தலைமறைவானார்.
மேலும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிரகாஷ் ஏற்கனவே திருமணம் ஆன இளம் பெண் ஒருவருடன் பழகி, அந்த பெண்ணுடன் அருள்வாய் மொழியில் குடும்பம் நடத்தினார். இதில் பிரகாஷின் கொடுமையால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபோல் பிரகாஷ் பல பெண்களை கடத்தி திருமணம் செய்யாமல், குடும்பம் நடத்தி சித்தரவதை செய்து விரட்டி அடித்து வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.