மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Breaking: இனி திருநங்கையருக்கு ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு சீட் இலவசம்...
இளங்கலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் திருநங்கையருக்கு சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு சீட் இலவசமாக வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அதாவது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருக்கக்கூடிய 131 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற 131 கல்லூரிகளிலும் இளங்கலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் திருநங்கையருக்கு தலா ஒரு சீட் இலவசமாக வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நடைமுறை வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த மூன்று மாவட்டங்களில் 131 திருநங்கையர்கள் எந்தவித கட்டணமும் இன்றி இளங்கலை பட்டப்படிப்பு பயில வாய்ப்பு உருவாகியுள்ளது.