மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பனின் மனைவியை மிரட்டி 9 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த நண்பன்! பதறவைத்த சம்பவம்!
திருச்சி, கே.கே.நகர், அன்பில் தர்மலிங்கம் நகரை சேர்ந்தவர் 41 வயதான தினேஷ். இவருக்கும் முகமது பாரூக் என்பவருக்கும் கல்லூரி காலத்திலிருந்தே நட்பு இருந்து வந்துள்ளது.
தினேஷிற்கும், பர்வீனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தினேஷை அவரது நண்பர் பாரூக் இஸ்லாமியராக மாதம் மாற்றி, அவருக்கு முகமது என பெயர் வைத்துள்ளார். இந்த நிலையில் பர்வீனை கடந்த 2008ம் ஆண்டு முகமது திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் முகமது வீட்டில் பணப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது தனது நண்பரான பாரூக்கை அழைத்து ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு உன் மனைவியிடம் தான் பிரச்சனை இருக்கிறது, அதனால் அவருக்கு நான் புனித நீர் கொடுக்கிறேன் என தனியாக அறைக்கு அழைத்து சென்று, நீரில் மயக்க மருந்து கொடுத்து பர்வீனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் அதனை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு கடந்த 9 ஆண்டுகளாகவே போட்டோவை காட்டி முகமதுவின் மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் நண்பன் முகமதுவின் மூத்த மகளிடம் பாரூக் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பர்வீன், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த பாரூக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.