மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி போன் செய்தால் பழங்கள், காய்கறிகள் வீடு தேடி வரும்! கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் அசத்தல்!
காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குவதற்காக தனிநபர்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் என்றும், அவர்கள் போன் செய்தால் வீட்டுக்கே வந்து வினியோகிக்கப்படும் என்றும், கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதால் பிரதமர் மோடி ஊரடங்கை மே 3 வரை அமல்படுத்தியுள்ளதால் கொரோனா பரவல் இந்தியாவில் சற்று குறைய தொடங்கியது. தமிழகத்திலும்
கொரோனவை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையை தமிழக சுகாதார துறை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சில பகுதிகளில் ஊரடங்கு கடுமைபடுத்த பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது. இந்த நிலையில் மக்களுக்குத் தேவையான பழங்கள், காய்கறிகளை வீடுகளுக்கே கொண்டு சென்று டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்தியுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு மேற்கொண்டு வருகிறது.
கொரோனாவால் பல கடைகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், காய்கறி வாங்க வெளியே செல்வதை தவிர்க்கும் பொருட்டும், கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் வாகனங்கள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கனிகளை விற்பனை செய்து வருகிறது.
பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்புகொண்டு பயன்பெற்று வருகிறார்கள். 7305050541, 7305050542, 7305050543, 7305050544 மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு புக்கிங் செய்த அனைவருக்கும் காய்கறிகள் தங்குதடையின்றி வழங்கப்பட்டுவருகிறது.
அதேபோல் ஒரு குடும்பத்திற்கு 5 அல்லது 6 நாட்களுக்கு தேவையான சுமார் 15 வகை காய்கறிகளை பாக்கெட் செய்து ரூ.220-க்கு சுகி, சுமோட்டோ நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை www.cm-d-a-c-h-e-n-n-ai.gov.in என்ற சி.எம்.டி.ஏ.வின் இணையதள முகவரி மூலமும் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், இச்சேவையானது நடுத்தர மற்றும் நலிந்த வருவாய் பிரிவினர் வசிக்கும் பகுதிகளிலும் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளிலும் வாகனங்கல் மூலமாக நேரடியாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.